Monday, July 11, 2011


ஆறு வருடங்கள்
சிரித்துப் பேசியதற்கு
மொத்தமாய்
அரை நொடியில் அழவைத்தாய்
அறியாமலா..?
அறியாமையாலா..?

உன்னோடு பேசாத நொடிகளில்
என்னுயிர்
என்னிடம் இருப்பதில்லை
என அறிந்தும் ஏன்
என்னைப் பேசவிடாமல்
தவிக்கவிட்டாய்...?

ஒரு நாளும் நான்
காணாத கண்ணீரை
நீ வடித்து
என் கண்களுக்குள்
கருமேகத்தை வரவழைத்துவிட்டாய்
இன்னும் என் கண்களுக்குள்
கசியும் நீர் தடைப்படவில்லை....

Yoga ||

tamilish

puthuvai